கருக்கலைப்புக்கு அனுமதி- அமெரிக்காவில் இரு மசோதாக்கள் நிறைவேற்றம் Evidenceparvai BREAKING TAMIL NEWS on July 16, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps கருக்கலைப்புக்கு அனுமதி- அமெரிக்காவில் இரு மசோதாக்கள் நிறைவேற்றம் மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை ரத்து செய்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கருகலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்த நிலையில், சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது சென்ட் சபையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது. Comments
Comments
Post a Comment