மதுரையில் கலைஞர் நுாலகம் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. 2023 ஜனவரியில் திறக்க வாய்ப்புள்ளது' என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: கலைஞர் நுாலகப் பணிகள் 99 சதவீதம் முடிந்து ஜூலை 30க்குள் கட்டுமான பணிகள் முடிவடைய உள்ளது. அதன்பின் ஒவ்வொரு தளத்திலும் அலங்கார பணிகள் நடைபெறும். அதை தொடர்ந்து 3 தனியார் நிறுவனங்கள், பொதுப்பணித்துறையினர், நுாலகத்தில் புத்தகங்களை எங்கே வைப்பது, குழந்தைகளுக்கான வசதிகள், வெளியில் பூங்கா, பார்க்கிங் வசதிகள் குறித்து கலந்து பேசி பணிகள் நடக்கும். அதன்பின் முதல்வர் வரும் ஜனவரியிலோ அதற்கு முன்போ, பின்போ திறப்பது குறித்து அறிவிப்பார்.
Comments
Post a Comment