தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பசுமை நிறைந்த மலைத்தொடர்களால் நமக்கு நல்ல தூய்மையான காற்று, உண்டு, பசுமை நிறைந்த காட்சிகளும் உண்டு, மழைகாலங்களில் அற்புதமான நீர் வீழ்ச்சி அதன் ஓடைகளும், அதனோடு துள்ளி விளையாடும் மீன்களும், அவ்வபோது அதன் ஓடையில் தண்ணீர் குடிக்க மயில், குரங்குகள், மான், வனவிலங்குகள், என்று இப்படி பல உயிர்கள் வந்து அழகூட்டும் மலைகளை கொண்ட மண் நமது தமிழகம். இப்போ அந்த அழகிய மலைகளை சுயநலம் பிடித்த மனித மிருகங்கள் தோண்டும் போது பெட்ரோல், நகை வைரங்கள், கிடைக்கிறதாம், அதனை சத்தமே இல்லாமல் அரசுக்கு துரோகம் செய்து நல்ல இலாபம் பார்க்கும் தர்மபுரி கனிமவள அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலையையும் தர்மபுரியில் உள்ள மலைகளை தோண்டினால் நகை, வைரங்கள், பெட்ரோல் கிடைக்குமா ன்னு அந்த இடத்துக்கு பார்க்க போகலாம் வாங்க
: தர்மபுரி மாவட்டம் அ. பள்ளிப்பட்டி, ( சாலூர் )பின்புறம் உள்ள போடுவராயன் மலை, தொப்பையாறு அருகில் உள்ள ராம்தாஸ்தண்டா என்ற கிராமத்தின் அருகில் அமைந்துள்ள கல்குவாரி, கடத்தூர் அருகே பள்ளிப்பட்டி மலைப்பகுதியிலும், மஞ்சவாடி கிராமத்தில் உள்ள மலை அடிவாரத்தில் குடியேறியுள்ள அரசியல் ஆதிக்கவாதிகளும், அனுமதி இல்லாமல் இயங்கி வரும் செங்கல் சூலைகளும், அதற்காக ஜால்ட்ரா அடிக்கும் அதிகாரிகளின் மவுனமும் அப்பகுதி மக்களின் கண்ணுக்கு தெரிந்த ஒன்றே, சாலூர் மலை அடிவாரத்தில் 500 - ம் ஏக்கருக்கு மேற்பட்ட அரசு பொறம்போக்கு நிலம் உண்டு. அந்த இடங்களில் கனிமவள அதிகாரிகளின் மூலமாக இது பட்டா நிலமென்று காட்டுகதையை அவிழ்த்துவிட்டு அவர்களையும் சிறப்பாக கவனித்துவிடுவதால் செம்மண், கருங்கல், கிராவல், போன்ற விலை மதிக்கத்தக்க பொருட்களை அள்ளி விற்பனை செய்ய உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறதாம். அனுமதி ஒரு வருடம் இருந்தாலும் ஒருவருட அனுமதியை வைத்துக்கொண்டு பலவருடம் கனிமவளங்களை தோண்டி விற்பனை செய்கிறார்களாம். அதுமட்டுமா மலையடிவாரம் உள்ள ஆற்றோடை பகுதிகளை சொந்த நிலத்திற்கு திருப்பிவிடுவதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரி, குளம் பெரிதளவில் பாதிக்கப்படுகிறதாம், இதுபற்றி விவசாயிகள் புகார் செய்தாலும் வட்டார அலுவலகத்தில் எவரும் கண்டுகொள்ளாமல், மக்களின் வரிப்பணத்தில் உருவாகிய அரசு கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் மின் விசிறி அடியில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு நன்றாக குறட்டைவிட்டு தூங்குவதுதான் அதிகாரிகளுக்கு வழக்கமாம். அப்படிப்பட்ட அதிகாரிகள் இங்கு நிறையவே உண்டு. என்று சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர். சரி இது இருக்கட்டும் கனிமவளத்தை தோண்டினால் வைரங்கள் பெட்ரோல் கிடைக்கும்னு சொன்னிங்களே அது எங்க என்று விசாரித்தோம், ஐயா இங்கதாய்யா இருக்கு இங்க இருக்கற கனிமவளங்களை தோண்டி கள்ளத்தனமாக விற்பனை செய்றதால அவங்களுக்கு எந்த ஒரு வரி காட்டாமலும் நல்ல லாபம் எடுக்குறாங்க அதுல பாதி கமிஷன் கனிமவளத்துறைக்கும் குறிப்ப சமீபத்துல கனிமவல்துறையில் இருந்து மாறிப்போன இரண்டு பெண் அதிகாரிகளுக்கு நல்ல கவனிப்பாம், அதுபோக பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இருக்குற வருவாய்துறைக்கும் நல்ல கிம்பளம்தானாம், அட இதுல பள்ளிப்பட்டி காவல்நிலையத்துக்கும் போகுதுங்கய்யா, இப்படி பலஇடத்துல மாசத்துக்கு ஒரு முறை கொடுத்துவிட்டு மிச்ச பணத்த வச்சி சேலம் டு அரூர் மெயின் ரோட்டில் உள்ள அலமேலுபுறத்தில பெட்ரோல் பங்க் ஆரம்பிச்சுட்டாங்களாம், இதுமட்டுமா அரூர், சேலம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பகுதிகளில் உள்ள நகை கடைகளில் பணத்தை முதலீடு போட்டு எந்த வரியும் கட்டாம சொகுசா சம்பாதிக்கறாங்க. இதுல இளிச்ச வாய்த்தனமா இருக்கறது என்னவோ தமிழக அரசுதான் இதை சொன்ன கோபம் வரும் ஆனா ஏன் சொல்றேன்னா , எந்த தொழில் மூலம் அதிக வருமானம் பெருகுதோ அதன் மீது வரிகளை போட்டு, அதில் ஊழல் நடக்குதா அதற்கு அபராதத்தை விதிக்கணும், குற்றங்கள் நடக்குதா அதற்கு அபராதம் விதிச்சாதான் ஒரு மாவட்டத்துடைய வருவாய் கூடுதலாகி மாநில அரசுக்கும் பெரும் உதவியா இருக்கும் ஆனா இங்க அரசுக்கு ஒத்துழைக்காமல் திருடர்களுக்குதான் அரசு அதிகாரிங்க உதவி பண்றாங்க, "விடியல் ஆட்சின்னு சொல்ற இந்த திமுக அரசு"
முதல்ல இந்த தர்மபுரியில ஊழலுக்கு துணை போகிற அரசு அதிகாரிகளுக்கு ஒரு விடிவுகாலத்த கொண்டு வந்தா இந்த தர்மபுரி மாவட்டம் உண்மையாக ஒரு விடியலைத் தேடும் என்று உறுதியளித்து 55 வயது மதிக்கத்தக்க சமூக ஆர்வலர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தற்போது தர்மபுரி மாவட்டத்திற்கு 45 ஆவதாக பொறுப்பேற்றுள்ள திருமதி சாந்தி இ. ஆ. ப அவர்கள் மக்களுக்கான குறைகளையும் தன்னிடம் வரும் புகார்களுக்கு உடனையாக தீர்வு காணப்படும் என்றார்.
பார்ப்போம் 45 வது, புதிய மாவட்ட ஆட்சியர், விடியில் அரசோடு இணைந்து தர்மபுரி "அரசு ஊியர்களுக்கு" தரமான விடிவுகாலத்தை கொண்டுவருவார்களா என்று ??..,, என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
Comments
Post a Comment