கொச்சின்: கேரளாவின் காசர்கோடு, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாத மழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வயநாட்டில் இரண்டு கர்ப்பிணியர், ஏழு குழந்தைகள் மற்றும் ஒரு மாற்றுத் திறனாளி உட்பட 427 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் படகு கவிழ்ந்து ஆழ்கடலில் மூழ்கி உயிரிழந்த ஒரு மீனவர் உடல் கொயிலாண்டி அருகே நேற்று காலை கரை ஒதுங்கியது.
மலபார் கிழக்கு பகுதியில் கனமழை பெய்யும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம் இடுக்கி, வயநாடு, கண்ணுார் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments
Post a Comment