ஈரோட்டில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

ஈரோட்டில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

ஈரோடு

ஈரோட்டில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று தொடங்கியது.


தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, ஈரோடு ஏ.இ.டி மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று தொடங்கியது. அதன்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த கலந்தாய்வில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் முன்னிலையில் கலந்தாய்வு நடந்தது. மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

வருகிற 12-ந் தேதி மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. உயர்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

மேலும் வருகிற 13-ந் தேதி உயர்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளலாம். பின்னர் வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதில் இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.

செய்தியாளர் கணேஷ்

Comments