சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுத்து கடத்தப்படுவதை தடுக்க முயன்ற டி.எஸ்.பி.,யை கடத்தல்காரர்கள் லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் நூஹ் என்ற மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில், அருகேயுள்ள பச்கோவன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் குவாரியில் கற்கள் வெட்டி கடத்தப்படுவதாக டிஎஸ்பி சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து போலீசாருடன், சுரேந்திர சிங் பிஷ்னோய் அங்கு சென்றார். அவர்களை கண்ட கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்களை மறித்த டிஎஸ்பி, பிடிக்க முயன்றார். அப்போது, ஒருவர் லாரியை அவர் மீது ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். அவருடன் இருந்த போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மனோகர் லால் கட்டார், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், உயிரிழந்த போலீஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
Comments
Post a Comment