ஐ ஏ எஸ் திவ்யதர்ஷினி பெயரை சொல்லி வசூல் வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகள் ! புதிய ஐ ஏ எஸ் நடவடிக்கை எடுப்பாரா ????
"லஞ்சம் வாங்குவதும் குற்றம் லஞ்சம் கொடுப்பதும் குற்றம்"
என்ற வாசகத்தை தலமைசெயலகத்தில் இருந்து அடிமட்ட அரசு அலுவலகம், கல்வி நிலையம், அரசு சார்ந்த தொழிற்சாலை, அரசு சார்ந்த வாகனங்கள், மருத்துமனைகள் என பல இடங்களில் இந்த வரிகளை எழுதி வைத்திருப்பார்கள். இதை பார்த்த உடன் நம் மனதில் ஓ! பரவால்லையே ஒபனா இப்படி இந்த அதிகாரி எழுதி வச்சிருக்காரு இவரு லஞ்சம் வாங்கமாட்டாரு போலன்னு பயங்கரமா யோசிச்சிருபோம்.
![]() |
முன்னாள் மாவட்ட ஆட்சியர் |
புதிய மாவட்ட ஆட்சியர் |
முன்னாள் இருந்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி செம்ம ஸ்ட்ரிட்டா இருந்தாங்களாம் எப்டின்னு கெட்டா? அரசு சொல்ற வேலைகளை அரசு ஊழியர்கள் சரியா செய்ராங்களா? அப்டி செய்யாதவங்கள உடனே அழைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்து அசுரவேகத்தில் தனது பணிகளை செய்திருக்கிறார் ஆட்சியர் திவ்யதர்ஷினி. அதுமட்டுமா, கால்நடை மருத்துவம் பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும் போது ஒருத்தர்க்கு கூட சிபாரிசு மூலமாக பணி நியமனம் வழங்கவில்லையாம். ஆட்சியர் திவ்யதர்ஷினி நேர்முகத்தேர்வு வச்சி ஒத்த ரூபா கூட வாங்காம தகுதி உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்ததனாள, 5 இலட்சம் 10 இலட்சம் கொடுங்க நாங்க வேல வாங்கிதரோம்னு ஆளுங்கட்சியைச்சார்ந்த திமுகவின் பிரமுகர்கள் பல்வேறு மாவட்டங்களில் வாங்கிருக்காங்க. அதே ஸ்டைல இங்க திமுக பிரமுகர்கள் ஃபாலோ பண்ணி வேலை வாங்கி தருவதாக லட்ச கணக்கில் பணம் வாங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்க முடியாமல் போனதால் பணம் கொடுத்த நபர்கள் திருப்பி கேட்டதால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த திமுக பிரமுகர்கள் நாங்க சிபாரிசு செய்த நபர்களுக்கு வேல கொடுக்காமல் போனா ஆளுங்கட்சிக்கு என்ன மரியாதையான்னு கேக்கமாட்டங்களா என்று மாவட்ட ஆட்சியரை ரகசியமாக சந்தித்து பேச்சி வார்த்தை நடத்தியுள்ளார்கள். இந்த பேச்சி வார்த்தைக்கு இடமள்ளிக்காத மாவட்ட ஆட்சியரை தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்ல ஏப்ரல் 14 - சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏப்ரல் 14 அன்று ஒரு சில அதிகாரிகளைத்தவிர மற்ற அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அன்றைய தினத்தில் வராமல் இருந்த அதிகாரிகளை அழைத்து கண்டித்துள்ளார்.
இதனால் மாவட்ட ஆட்சியர் கண்டித்ததை பொருத்துகொள்ளாமல் போன அதிகாரி ஒருவர் பாப்பிரெட்டிப்பட்டி திமுக ஒன்றியத்தில் உள்ள முக்கிமான பிரமுகரிடம் கூற அம்பேத்கர் பிறந்தநாள் அன்னைக்கு விருப்பம் இருந்தாதான் வரமுடியும் வர்லனா எதுக்கு கலெக்டர் கூப்ட்டு பேசணும், உடனே மாவட்ட திமுக தலைமைக்கு தெரியப்படுத்தி நம்ம சாதிகாரங்கள பார்த்துதான் இந்த கலெக்டர் பேசுது என்று கூறி மாவட்ட வாரியாக சாதி வன்மத்தை தூண்டி ஆட்சியர் திவ்யதர்ஷினி ஒரு தலைபட்சாமக செயல்படுகிறார் என்று ஒரு சில திமுக நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். முதல்வர் சொன்னதைத்தான் கலெக்டரும் செஞ்சிருக்காங்க.. இதை பார்க்கும்போது
தர்மபுரியில் உள்ள திமுக நிர்வாகிகள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அரசு ஊழியர்களும், இங்கே இருக்கும் ஒரு சில திமுக நிர்வாகிகள் சாதி வன்மத்தோடு இருப்பதால்தான் சென்ற சட்ட மன்ற தேர்தலில் கோட்டை விட்டுள்ளனர். இவங்க முதல்வரை மதித்திருந்தால் இது நடந்திருக்குமா ? என்ற கேள்வி எழுகிறது...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பெண்கள் இருக்கும் பதவியை வைத்து அவருடைய கணவர்கள் யாரும் உரிமை கொண்டு பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் இருக்கையில் அமர்ந்து அதிகாரத்தை பயன்படுத்தினால் அவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகம், மொரப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் திமுகவை சேர்ந்த பெண் கவுன்சிலர் கணவன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகன்றனர். என்ற தகவலின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது. அது உண்மையாக இருந்துள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி இது போன்ற நிகழ்வு அடுத்த முறை நடந்தால் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக 6 மாதம் சஸ்பென்ட் செய்துவிடுவேன் என கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளார். இதனால் கோபம் கொண்ட திமுக பிரமுகர்கள் நமக்கு சாதகமாக ஆட்சியர் திவ்யதர்ஷினி செயல்படுவதில்லை என தலைமைக்கு புகார் கொடுத்ததால் அவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளை இருக்க விடமாட்டாங்க அதும்போக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சொன்னத செஞ்சதாள மாவட்ட ஆட்சியருக்கு என்ன நிலமை என்று பாருங்கள் என முன்னாள் இருந்த மாவட்ட ஆட்சியர் காரின் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இப்படிபட்ட நேர்மையான மாவட்ட ஆட்சியர் என்று வளம் வந்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு ஆய்வு மேற்கொள்ளும்போது கோட்டப்பட்டி, அரூர், சித்தேரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, நல்லம்பள்ளி, கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி, கடத்தூர், நரிப்பள்ளி, அவருடன் செல்லும் ஒரு சில அதிகாரிகள் போற இடத்திலெல்லாம் உள்ள அரசு அலுவலகங்கள், பேரூராட்சி, அலுவலகங்களில், டீசலுக்கு பணம் இல்ல, மதிய சாப்பாட்டுக்கு பணம் இல்லன்னு மறைமுகமாக 10000 ஆயிரம் கணக்குல வாங்கிருகாங்க இந்த தகவல் திமுக நிர்வாகிகளுக்கு தெரியவர ஏப்பா தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில லஞ்சம் தலைய விரிச்சி போட்டு ஆடுதாம்பா அதனாலதான் மாவட்ட ஆட்சியர் மாற்றபட்டாங்கனு குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இந்த தகவல் தெரிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் நொந்துபோய் கிடக்காங்களாம். ஒரு பெண் அதிகாரி நேர்மையான முறையில் எவ்வளவு தைரியமா இந்த பணிய செஞ்சிருக்காங்க அப்படிபட்ட அதிகாரிக்கு இப்படி ஒரு பேர வாங்கி கொடுத்திருக்காங்க யாரு அந்த ஒரு சில அதிகாரிகள் என்று மாவட்ட அலுவலகம் முழுவதும் ஒரே சலசலப்பா இருக்காம். ஒரு பெண் கல்வியிலும் நேர்மையைலும் துணிந்து செயல்பட்டு இந்த சமூகத்தில் நிமிர்ந்து வந்தால், கூடவே இருந்து அவருடைய பெயரை வைத்து ஒரு சாதாரண குடிகார மனிதன் ஒரு சமூகத்தில் என்ன மரியாதையை கொடுப்பானோ அதைவிட மோசமான அளவில் இரண்டு படித்த ஆண் மிருகங்கள் போற இடமெல்லாம் லஞ்சம் வாங்கியதால் முன்னாள் இருந்த மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக சிதைத்துவிட்டனர். கூடவே இருக்கும் அந்த இரண்டு ஆண் அதிகாரிகள் !! அவர்களுக்கு மட்டும் அப்போது தெரிந்திருந்தால் இந்த இரண்டு அதிகாரிகளும் என்ன நிலமைக்கு தள்ளபட்டிருப்பாங்கனும் தெரியாது. நேர்மையாக இருக்கும் அதிகாரகளை மிரட்டும் அரசியல் பிரமுகர்களையும், ஆளுகின்ற அரசு அதரவு கொடுத்து - லஞ்சம் வாங்கி பொழப்பு நடத்தி ஒரு மாவட்டத்துடைய பெயரை கெடுக்கும் வகையில் இப்படிபட்ட அதிகாரிகள் செய்யும் செயல்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்தால் எதிர்காலத்தில் அரசுக்கும் பேராபத்தாக மாறிவிடும். மற்றும் இது போன்ற அதிகாரிகளை கூடவே வைத்திருந்தால் நிச்சயம் தற்போது புதிதாக வந்திருக்கும் ஆட்சியர் கி சாந்தி அவர்களின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்த வாய்ப்பிருக்கு! என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மற்ற அதிகாரிகள் கவலையில் தவிக்கும் சூழலுக்கு தள்ளபட்டிருக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்..... ஒரு
நேர்மையான பெண் அதிகாரிக்கு கூடவே இருந்து சதித்திட்டம் தீட்டிய இரண்டு ஆண் அதிகாரிகளை தற்போது உள்ள ஆட்சியர் திட்டம் தீட்டி அவருடைய பெயரையும் தர்மபுரியையும் காப்பாற்றுவாரா. ??? பொறுத்திருந்து பார்ப்போம்!!!....
Comments
Post a Comment