புதுடில்லி: தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கையாள அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா உதவும் என நம்புவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.
evidenceparvai.in
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கவலையுடன் கவனித்து வருகிறது. பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு, உணவு , எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவை அங்குள்ள மக்களிடையே பெரும் சிரமத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த துயரமான நெருக்கடியான தருணத்தில், இலங்கை மற்றும் அந்நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவிப்பதுடன், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை அவர்களால் தீர்க்க முடியும் என நம்புகிறது.
தற்போதைய சூழ்நிலையில், சிரமங்களை கையாள இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் , இந்தியா உதவும் என நம்புகிறோம். இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் சர்வதேச சமூகம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சோனியா தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment