அரூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை- காவல்துறையினரின் அதிரடி சோதையால் 7 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு.

 

தமிழகத்தில் முற்றிலுமாக லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டு, அதை கண்காணிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் 

தர்மபுரி மாவட்டம் அரூரில் கொடி கட்டி பறக்கும் லாட்டரி விற்பனையால் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. இந்த லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்த நிலையில், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசீர்பாத்திமா தலைமையில் பேருந்து நிலையம், மஜீத் தெரு, கச்சேரிமேடு, 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மொபைல் ஷாப், டீக்கடை உள்ளிட்ட கடைகளில் கேரளா லாட்டரி விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக வந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் தடை செ…

Comments