உலகின் சிறந்த 50 இடங்கள் : 'டைம்' இதழில் இடம் பெற்றது கேரளா, ஆமதாபாத், தமிழகம் ?

நியூயார்க்: 'டைம்' இதழில் உலகின் சிறந்த இடங்கள் பட்டியலில் இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் குஜராத்தில் உள்ள ஆமதாபாத் நகரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.


அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'டைம்' இதழ் 2022ம் ஆண்டின் உலகின் சிறந்த 50 இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கேரள மாநிலம் குறித்து 'டைம் இதழில் தெரிவித்துள்ளதாவது,

இந்தியாவிலுள்ள மிக அழகான இடங்களில் கேரளாவும் ஒன்று. கண்கவர் கடற்கரைகள், பசுமையான பேக்வாட்டர்கள், கோயில்கள், அரண்மனைகள் என கேரளா ''கடவுளின் தேசம்'' எனவும் அழைக்கப்படுகிறது. இம்மாநிலத்தில் படகு வீடுகள் சிறந்த சுற்றுலா அனுபவத்தினை தருகிறது. சுற்றுலா பயணிகள் கேரளாவின் கடற்கரை அழகை கண்டு அனுபவிக்க தொடங்கி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆமதாபாத் நகர் குறித்து டைம் இதழில் கூறப்பட்டுள்ளதாவது, ''யுனஸ்கோவால் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் ஆமதாபாத் நகரம். சபர்மதி நதிக்கரையில், 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் காந்தி ஆஸ்ரமம் முதல், 9 நாட்கள் கொண்டாடப்படும் உலகின் நீண்ட நடனத்திருவிழாவான நவராத்திரி இந்த நகரம் கலாச்சாரச் சுற்றுலாவுக்கான ஒரு மெக்கா என டைம் இதழில் குறிப்பிட்டுள்ளது.

தவிர இந்த ஆண்டுக்கான சிறந்த இடங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு அமிரகத்தின் ராஸ் அல் கைமா, உட்டாவின் பார்க் சிட்டி, சியோல், ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப், ஆர்க்டிக், ஸ்பெயினின் வலென்சியா, பூட்டானின் டிரான்ஸ் பூட்டான் பாதை, சர்வதேச விண்வெளி நிலையம், பொகோடா, ஜாம்பியாவில் உள்ள லோயர் ஜாம்பேசி தேசிய பூங்கா, இஸ்தான்புல் மற்றும் ருவாண்டாவின் கிகாலி போன்றவை இடம் பிடித்துள்ளன.

Comments