இதுமட்டுமின்றி, ஹீரோ நிறுவனம் ஏற்கனவே எக்ஸ்பல்ஸ் 200 4வி இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக 'ரேலி கிட்' ஒன்றையும் உருவாக்கி வருகின்றது. அதன் விலை ரூ. 38 ஆயிரம் ஆகும். இந்த கிட்டைக் கொண்டு வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200 4வி மோட்டார்சைக்கிளைகூட புதிய ரேலி ரக வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும்.
புதிய ரேலி எடிசன் எக்ஸ்பல்ஸ் 200 பைக் உருவத்திலும், தோற்றத்திலும் நிறைய மாற்றம் கொண்டதாக விற்பனைக்கு வர உள்ளது. குறிப்பாக உயரம், வீல் பேஸ் மற்றும் நீளம் ஆகிய அளவுகளில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கூடுதல் ஆஃப் ரோடு பயண அனுபவத்தை வழங்கும் விதமாக இன்னும் பல சிறப்பு வசதிகளும் புதிய எக்ஸ்பல்ஸ் 200 இல் இருக்கும் என தெரிகிறது.
கூடுதல் ஆஃப் ரோடு பயண அனுபவத்தை வழங்கும் விதமாக இன்னும் பல சிறப்பு வசதிகளும் புதிய எக்ஸ்பல்ஸ் 200-ல் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் 199.6 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிகபட்சமாக 19 பிஎச்பி மற்றும் 17.35 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரவிருக்கும் ரேலி எடிஷனில், புதிய வகை எல்இடி ஹெட்லைட், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சஸ்பென்ஷன், உயரமான ஹேண்டில் பார், ஒயர் ஸ்போக்ட் வீல், இரட்டை பயன்பாட்டு வசதிக் கொண்ட டயர் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெறவுள்ளன.
இந்த பைக்கை இந்தியாவில் மட்டுமின்றி துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனைக்கு வழங்க ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் விலை ரூ. 1.32 லட்சம் ஆகும். இதைவிட சற்று அதிக விலையிலேயே ரேலி எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments
Post a Comment