10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி அரசு பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடைய பிறந்தநாள் விழாவுக்கு சென்றுள்ளார். பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து மாணவியை மிரட்டி தங்கள் வீட்டிற்கு வரவைத்து 3 மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை சக மாணவர்கள் வீடியோ எடுத்து சக மாணவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.


தற்போது அந்த பள்ளியில் உள்ள பல்வேறு மாணவர்களும் இந்த வீடியோவை வைத்துக் கொண்டு இந்த மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து மிகுந்த மன உளைச்சல் அடைந்த மாணவி ஆவினங்குடி காவல் நிலையத்தில் தனது தாயுடன் வந்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் 3 மாணவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் யார் யாராருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள், மாணவி வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments