கொட்டுது பண மழை: திருப்பதியில் காணிக்கை 1 ,500 கோடியை எட்டும்

திருமலை திருப்பதியில் சமீப காலமாக உண்டியலில் வசூலாகும் காணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. சமீப 5 மாதங்களில் மாதம் தோறும் உண்டியல் காணிக்கை 100 கோடிக்கும் மேல் வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்து வருகிறது. மேலும் அதற்கேற்ப மாத உண்டியல் வருமானமும் பெருகி வருகிறது. கடந்த மார்ச் மாத காணிக்கை ரூ. 128 கோடி , ஏப்ரல் மாதத்தில் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் 129.93 கோடி, ஜூன் மாதத்தில் 120 கோடி, ஜூலை மாதம் இதுவரை 106 கோடி.40 லட்சம் காணிக்கையாக உண்டியல் நிரம்பி வருகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்த ஆண்டு முடிவுக்குள் மொத்தம் ஆண்டு வரவாகும் காணிக்கை ரூ. ஆயிரத்து 500 கோடியை எட்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். இதில் கரன்சியாக, சில்லரையாக வரும் வரவு மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. இது போக தங்கம், வெள்ளி, வைரம் என பார்த்தால் அது வேற கணக்கை தொடும்.

Comments