நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் பயனற்று உள்ள வீடுகளில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் அந்த வீடுகளை அப்புறப்படுத்தி மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பள்ளிபாளையம் நகராட்சி மேலாளர் மாலதி அவர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்க துணை தலைவர் உமா சங்கர் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன், நகர செயலாளர் உதயகுமார்,நகர தலைவர் பழனியப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர்.சி.முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கணேஷ்
Comments
Post a Comment