தேர் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்க பாஜ எதிர்ப்பு மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதா: தமிழக ஆளுநருக்கு தலைவர்கள் கண்டனம்
சென்னை: தேர் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக ஆளுநருக்கு இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோயில் திருவிழாவில், நேற்று தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள். இந்நிகழ்வையொட்டி குமரி மாவட்ட மக்கள் மத்தியில் மத வெறுப்பை விதைக்கும் நோக்கத்துடன் பாஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். இது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.தமிழ்நாட்டில் ஊர் திருவிழாக்களில் பல்வேறு மதத்தினரும் பங்கெடுப்பதும், முறை செய்வதும் மிகவும் இயல்பாக இருந்து வருகிறது. இந்த நல்லிணக்க சூழல் சங்க பரிவாரத்தின் கலவர முயற்சிகளுக்கு தடையாக இருக்கிறது. அதனாலேயே அதனை கெடுப்பதற்கு பாஜ முயற்சிக்கிறது. வேளிமலை முருகன் கோயில் தேரோட்டத்தையொட்டி உருவாக்கப்படும் சர்ச்சையும், கலவர நோக்கம் கொண்ட வெறுப்பு பிரச்சாரத்தின் பகுதியே ஆகும். ஏற்கனவே, குமரியில் பல்வேறு கோயில் வளாகங்களை சங் பரிவார அமைப்பினர் பயன் படுத்தி, வெறுப்பு மூட்டி வருகின்றனர். இப்போது அது வெளிப்படையாகியுள்ளது. எனவே இந்த விசயத்தில், அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
வி.எம்.எஸ்.முஸ்தபா (தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): சென்னை வானகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். எண்ணற்ற தியாகங்களை செய்து இந்தியா எனும் மாபெரும் ஜனநாயக நாடு உருவாக்கப்பட்டது என்பது கட்டுகதையல்ல, அதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஒரு புறம் சீனா மறுபுறம் பாகிஸ்தான் பல்வேறு அச்சுறுத்தலை சந்தித்து வரும் இந்தியாவை தங்களது சுக துக்கம் இளமை காலங்களை தொலைத்துவிட்டு, எல்லையிலும், இமயமலை போன்ற கடும்குளிரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் ஆர்.ரன்.ரவி கொச்சைப் படுத்தியிருக்கிறார்.
Comments
Post a Comment