ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நலசங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடந்தது.

ஜூன் 30.  தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில்  ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நலசங்கம் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம்.


ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நலசங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் தர்மபுரியில் நடந்தது.


கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அப்புசாமி வரவேற்றார். மாவட்டதலைவர் ஜடையன் என்ற பீமன் தலைமை வகித்தார். ரமேஷ், மாவட்ட பொருளாளர் அன்பழகன், குமரவேல், மணி முன்னிலை வகித்தனர். தலைவர் கண்ணன் சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் தனசேகரன்,

தலைமைநிலைய செயலாளர் சுரேஷ்குமார் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் ஏற்பட்டுள்ள

பிரச்னைகளை களைய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரபதிவு பணிகள் நடப்பதை எளிமை படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் மாதையன் நன்றி கூறினார்.

Comments