குமாரபாளையம் காவல்துறை ஆய்வாளர் ரவி சிறந்த கல்வியாளர் விருதை விடியல் பிரகாஷிற்கு வழங்கினார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 
உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பத்து நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. விழாவில் 
விடியல் ஆரம்பம் கல்வி சேவையை பாராட்டி  குமாரபாளையம் காவல்துறை ஆய்வாளர் ரவி அவர்கள் கரங்களால் சிறந்த கல்வியாளர் விருது வழங்கி விடியல் பிரகாஷ் அவர்களை
பாராட்டினார்கள்.

மேலும் யோகா ஆசிரியர்கள் சாந்தி, தர்மலிங்கம், ரவிசந்திரன், டாக்டர் நாகராஜ்,சம்பத் மற்றும் உலக சமாதான ஆலய உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.

செய்தியாளர் கணேஷ்

Comments