குமாரபாளையத்தில் திருநங்கைகள் , மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் துவக்கம் .

குமாரபாளையத்தில்   திருநங்கைகள் , மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் துவக்கம் . 
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதி பொது மக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கைகள் மற்றும் முதியோர்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள
ரிதிக்ஷா அகாடமி பல்கலை அரங்கம் , குமாரபாளையம் வட்டமலை அம்மையப்பர் அரங்கத்தில் துவங்கப்பட்டது . 

அயர்லாந்தில் பணிபுரியும்  நிர்மல் அவர்கள் முயற்சியால் உருவாக்கப்பட்டது



இதில்  கராத்தே , நடனம் , இசை பயிற்சி , செஸ் , கேரம் , பேட்மிட்டன் ரோபோடிக்ஸ் டேபிள் டென்னிஸ் , யோகா  ஆகியவைற்றிற்கு மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இந்த அரங்கம் இலவசமாக வழங்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகிறது . 

இந்த நிகழ்வை இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின காவல்துறை அதிகாரி பிரிதிகா யாஷினி , இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிகெட் அணியின் துணைத் தலைவரான சச்சின் சிவா ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தனர் .

இந்த நிகழ்வில் கத்தேரி ஊராட்சிமன்றத் தலைவர் தமிழ்செல்வி சண்முகம் சார்பில் சண்முகம் துணை தலைவர் விடியல் பிரகாஷ்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கராத்தே,சிலம்பம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் .
சிறப்பு விருந்தினர்,  பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் காலை உணவு  மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
மதன் அவர்கள் மேற்பார்வையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Comments