திருப்பூர் பள்ளிவாசலை சீல் வைக்க முயற்சி..! தடுக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு வக்பு வாரியம்

அண்மைச் செய்தி

*திருப்பூர் பள்ளிவாசலை சீல் வைக்க முயற்சி* 
*தடுக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு வக்பு வாரியம்*

*வக்பு வாரிய கூட்டத்தை ஒத்தி வைத்து தலைமை செயலகம் விரைந்தனர் வக்பு வாரியத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்*

சென்னை, ஜுன் 30:
திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் மஹாலட்சுமி நகரில் *மஸ்ஜிதே இஹ்லாஸ் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்* செயல்பட்டுவருகிறது. இப்பள்ளிவாசலை பூட்டி சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் இன்று 30/06/2022 காவல்துறை, வருவாய் துறை, மாநகராட்சி ஒத்துழைப்புடன் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதை தடுக்கும் விதமாக முஸ்லிம் ஜமாத்தார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 
இது பற்றிய தகவல் தமிழ்நாடு வக்பு வாரிய மாண்புமிகு தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் எக்ஸ் எம்பி அவர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வக்பு வாரிய இரண்டாம் நாள் கூட்டம் இன்று நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் அக்கூட்டத்தை ஒத்தி வைத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசு தலைமை செயலகம் விரைந்துள்ளனர். 
தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், மாண்புமிகு முதல்வர் அவர்களின் தனிச் செயலாளர்கள் ஆகியோரிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 
இந்த சந்திப்பில் மாண்புமிகு தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் எக்ஸ் எம்பி, உறுப்பினர்கள் கே.நவாஸ் கனி எம்பி, அப்துல் சமது எம்எல்ஏ , ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ, பாத்திமா முஸப்பர் எம்.சி, வழக்கறிஞர் எம்.கே.கான், வழக்கறிஞர் சையது ரேஹான், செய்து அலி அக்பர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
சட்ட ரீதியான நடவடிக்கைளை தமிழ்நாடு வக்ப் வாரிய முதன்மை செயல் அலுவலர் ரபியுல்லா, வாரிய தலைமை வழக்கறிஞர் காஜா முஹையதீன் ஜிஸ்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Comments