ஜனாதிபதி தேர்தலுக்கு இரட்டை இலை சின்னத்தை காட்டி முதல்வர் ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு ; ஷாக்கான திமுக தொண்டர்கள் !!

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார் யஷ்வந்த் சின்ஹா. மேலும், திமுக கூட்டணி கட்சியினரிடமும் ஆதரவு கோரினார்.

வரும் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்தலைவராக இருந்த சின்ஹா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக தனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி வேட்பாளர்கள் தத்தமது கூட்டணி கட்சி தலைவர்களிடம் நேரில் சென்று ஆதரவு கோரி வருகின்றனர். அந்த வகையில் சென்னை வந்துள்ள யஷ்வந்த் சின்ஹா, திமுக தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்றார். தொடர்ந்து, திமுக.,வின் கூட்டணி கட்சியிடமும் ஆதரவு கோரினார்.  யஷ்வந்த் சின்ஹா அவர்கள் இரட்டை இலை சின்ன வடிவில் தனது கை விரலை காட்டியதால் தொண்டர்களிடையே சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு அது வெற்றியின் சின்னம் இது உலகளவில் பின்பற்றப்படுகிறது இதைக்கண்டு பெரிதாக சிந்திக்கா வேண்டாம் என பேசப்பட்டது.


Comments