evidenceparvai.in |
ஆசியாவின் மிகவும் விரும்பப்படுகிற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கேரளா தனிச்சிறப்பான புவியியல் அம்சங்களுடன் இருக்கிறது. அழகான நீண்ட கடற்கரைகள், அமைதியான பசுமைக் காயல்கள், பசுமைப் போர்த்திய மலைவாழிடங்கள் என பல்வேறு சுற்றுலா தலங்கள் உங்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன.
சுற்றுலா செல்வதை விருப்பமாக வைத்திருக்கும் நபர்கள் கட்டாயமாக செல்ல வேண்டிய இடம் கேரளா தான். கேரள பயணம் உங்களுக்கு சிறப்பான மறக்கமுடியாத அனுபவங்களை அளிக்கும். கேரளாவில் நீங்கள் முக்கியமாக பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் குறித்து கூறுகிறது இந்த கட்டுரை...
ஆலப்புழா (படகு வீடு)
கேரளாவின் சுற்றுலா தலங்களில் முதலிடத்தில் உள்ளது ஆலப்புழா படகு வீடு தான். “கிழக்கின் வெனிஸ்” என்றும் அழைக்கப்படும், ஆலப்புழாவில் ஒரு படகு வீட்டினை நீங்கள் வாடகைக்கு எடுக்கலாம். இங்குள்ள படகு வீடுகள் 5 நட்சத்திர விடுதிகள் போல அழகாக அனைத்து வசதிகளுடன் இருக்கும். படகு வீட்டில் நீங்கள் செல்லும் நீர் வழி பயணத்தில் அழகான தென்னை மரங்களும், நெல் வயல்களும், உப்பங்கழிகளும் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அருகிலேயே ஆலப்புழா ரயில் நிலையம் இருப்பதால், பயணம் சுலபம் தான். ஆலப்புழாவில் சீசன் காலம் செப்டம்பர் முதல் மே வரை.
கேரளாவின் அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்று மூணாறு தான். இந்த மலை வாசஸ்தலத்தில் சுமார் 80,000 மைல் தேயிலைத் தோட்டம் உள்ளது. தேயிலை வளர்ப்பிற்கு சாதகமான சூழலை கொண்டிருக்கும் சாய்வான மலைகள், பார்வையிட சிறந்த இடங்களில் ஒன்றாகும். மூணாறில் மலையேற்றம் மற்றும் முகாமிடுவது நிச்சயமாக உற்சாகமான அனுபவத்தை கொடுக்கும். மேலும் மூணாறில் உள்ள அத்துகாட் நீர்வீழ்ச்சிகள், சாயப்பாரா நீர்வீழ்ச்சிகள், டாடா தேயிலை அருங்காட்சியகம் ஆகியவை கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளன. கண்டிப்பாக மூணாறு பயணம் உங்களது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். சீசன் காலம் - அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை. கேரளாவில் பார்க்க வேண்டிய பசுமையான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மரவீட்டில் தங்கும் அனுபவம் புதுமையாக இருக்கும்.
வயநாடு
ஏராளமான பழங்குடியின மக்கள் அங்கு வசிப்பதால் பழங்குடி பாரம்பரியத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். இங்கு மலையேற்றம் உங்களுக்கு அற்புதமான அனுபவத்தை கொடுக்கும். மேலும், வயநாடு அருகே பார்வையிட சிறந்த இடங்களாக எடக்கல் குகைகள், பனசுரா சாகர் அணை, மற்றும் வயநாடு வனவிலங்கு சரணாலயம் என பல்வேறு இடங்கள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலகுறிஞ்சி மலரைக் காணலாம். சீசன் காலம் - அக்டோபர் முதல் மே வரை.
திருச்சூர்
திருச்சூர் என்பது கேரளாவின் கலாசார தலைநகரமாகும். கேரளாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்களில் ஒன்றாக திருச்சூரை சொல்லலாம். இந்த நகரத்தில் கட்டப்பட்டுள்ள கோயில்கள், கலாச்சார மையங்கள், தேவாலயங்கள் உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். கேரளாவின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நீங்கள் காண விரும்பினால், நிச்சயமாக இதைவிட சிறந்த இடம் இல்லை. இங்கு நடைபெறும் திருச்சூர் பூரம் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சீசன் காலம் - அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை. இயற்கையையும் வரலாற்றையும் ஆராய விரும்புவோருக்கு மிகச் சிறப்பான ஒரு சொர்க்கமாக விளங்கும் இந்த கோழிக்கோடு. தேவாலயங்கள், கோயில்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் முதல் சரணாலயங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் வரை தன்னுள் வைத்துள்ள கோழிக்கோடு உங்கள் விடுமுறையை அழகான அனுபவங்களை தரக்கூடியதாகவும் உள்ளது. அங்குள்ள மனஞ்சிரா, கோனோலி கால்வாய், ஹிலைட் மால், கல்லாய், தாலி கோயில் ஆகியவை பார்க்க தவறாதீர்கள். சீசன் காலம் - செப்டம்பர் முதல் மே வரை.இயற்கை மாறா கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா இயற்கைக் காதலர்களின் வரம் என்பதில் ஐயமில்லை
Comments
Post a Comment