நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் சார்பாக 39 வது மாதாந்திர சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஜோதிட சாம்ராட் வாஸ்து ஈஸ்வரன் தலைமை தாங்கி ஜோதிடமும் வாஸ்துவும் என்ற அற்புதமான தகவலை எடுத்துக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஜோதிட உலகநாயகன் பாலாஜி ஹாசன் நாடி முறையில் ஜோதிட பலன் சொல்லும் சூட்சமம் சிறப்புரை குறித்துப் பேசினார்.
ஜோதிட ஆசான் ராஜசங்கர செல்போன் நம்பரை வைத்து எவ்வாறு பலன் சொல்ல வேண்டும் அற்புதமான சிறப்புரையும் இந்த நிகழ்ச்சியில் தன வருவாய் பெருக என்ன செய்ய வேண்டும் என்று ஜோதிட அகத்தியன் திருச்செங்கோடு பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்
இந்த நிகழ்ச்சியில் எம்.எம். சிஸ்டத்தின் மூலமாக எளிமையான முறையில் பலன் சொல்லும் வழிமுறைகள் முகுந்தன் முரளி அவர்கள் அற்புதமான முறையில் சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவதும் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் நிறுவனத் தலைவர் நல்வாழ்க்கை ஜோதிடர் பி.ஏ.முகுந்தன் முரளி செய்திருந்தார்.
Comments
Post a Comment