கோவை:''ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பொய் கருத்து தெரிவித்து இருப்பதால், அவர் மீது வழக்கு தொடரப்படும்,'' என பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.கோவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், மலுமிச்சம்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுடன் பால் கொள்முதல் குறித்து நேற்று கள ஆய்வு நடத்தினார்.பின், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள், ஐ.பி.எஸ்., அதிகாரி. அவர் எங்களின் தரத்துக்கு ஏற்றவாறு பேசினால் பேசலாம். அவர், 'நோட்டா'வை விட குறைவான ஓட்டு வாங்கியவர். 'ஹெல்த் மிக்ஸ்' தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்து தவறானது. அவர் தன்னை, முன்னிலைப்படுத்தி, ' நானும் ரவுடி, நானும் ரவுடி' என்பது போல் கூறி வருகிறார். 'ஹெல்த் மிக்ஸ்' பொருட்கள் தயாரிப்பது சாத்தியமா என்பது குறித்த பணிகள் நடந்து வருகின்றன. ஆய்வின் முடிவுக்கு பின் தான் 'ஹெல்த் மிக்ஸ்' பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதற்குள், 'சுகாதாரத்துறை அமைச்சர், 77 கோடி ரூபாய் வாங்கினார்' என குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை மீது நிச்சயமாக வழக்கு தொடரப்படும். இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.
Comments
Post a Comment