திருச்செங்கோட்டில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் குமரமங்கலம் பகுதியில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புறநகர் காவல் எல்லையில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் குமரமங்கலம் பகுதியில் நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி கொடி அசைத்து  தொடங்கி வைத்தார். இதில் விவேகானந்தா கல்லூரி மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். திருச்செங்கோடு டி.எஸ்.பி.சீனிவாசன் புறநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் கணேஷ்

Comments