பாலசோர்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று அக்னி-4 ஏவுகணை இன்று விண்ணில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
அணு ஆயுதங்களை சுமந்து சென்று 4,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கவல்ல அக்னி-4 ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை இன்று ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.அப்போது குறிப்பிட்ட துல்லியமாக இலக்கைத்தாக்கியது. அக்னி-4 ஏவுகணையின் வெற்றி, இந்திய ராணுவத் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அக்னி-4 என்பது அக்னி வரிசை ஏவுகணைகளில் நான்காவது ஆகும்.
Comments
Post a Comment