கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு 10 ஆண்டு சிறை!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் சமூக பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.சிதம்பரத்தைச் சேர்ந்த கலியபெருமாளும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை வாலிபர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரில் கலியபெருமாளை பொலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிதம்பரம் போக்சோ நீதிமன்றம் கலியபெருமாளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Comments