அமெரிக்காவின் பிரபலமான மேயோ கிளினிக்கின் ஆராய்ச்சியாளர்கள், இதயத்தின் நலனை அளக்கும், அல்காரிதம் என்பதும் மென்பொருள் நிரலை உருவாக்கியுள்ளனர். இந்த அலாகாரிதத்தை செயல்படுத்த மேயோ மருத்துவர்கள் தேர்ந்தெடுத்த கருவி எது தெரியுமா? ஆப்பிள் வாட்ச்.
ஏற்கனவே, துாக்கம், ரத்த அழுத்தம் போன்ற பல உடல் நல அளவைகளை ஆப்பிள் வாட்ச் மிக துல்லியமாக கணிப்பதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் மேயோ கிளினிக்கும் ஆப்பிள் வாட்சையே தங்கள் ஆய்வுக்கு எடுத்துகொண்டுள்ளது.
இதய நலனை அளக்கும் ஈ.சி.ஜி., கருவியில், மொத்தம் 12 மென் மின் முனைகளை, நோயாளியின் உடலில் ஒட்டவைத்து, மின் துடிப்பலைகளை அளப்பர். ஆனால், ஆப்பிள் வாட்சோ, மணிக்கட்டில் ஒரே ஒரு மின் முனையை வைத்து இதயத் துடிப்பு மின்னலையை பதிவு செய்கிறது. இதன் துல்லியத்தைக் கூட்டத்தான், மேயோ விஞ்ஞானிகள் ஒரு அல்காரிதத்தை எழுதியுள்ளனர்.
இந்த இரண்டையும் கொண்ட ஒரு செயலியை, 1.25 லட்சம் பேரிடம் தந்து சோதித்தனர் மேயோ விஞ்ஞானிகள்.அதன் முடிவில், வழக்கமான பெரிய ஈ.சி.ஜி., இயந்திரத்தைவிட, ஆப்பிள் வாட்சில் மேயோ அல்காரிதம் வாயிலாக எடுக்கப்பட்ட இதய அளவைகள் துல்லியமாக இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, இதய நோயாளிகளை கண்காணிக்க மருத்துவர்களுக்கு ஆப்பிள் வாட்ச் உதவும்.
Comments
Post a Comment