உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க., இளைஞரணி செயலாளரான உதயநிதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., ஆக உள்ளார். அவரை அமைச்சராக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக, அன்பில் மகேஷ், செந்தில்பாலாஜி, நேரு, சேகர்பாபு உள்ளிட்ட பலர், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என ஒவ்வொருவராக பேட்டி கொடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அப்போது உதயநிதி பதவியேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுக் கூட்டம், அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் தலைமையில் நடந்தது. அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். தி.மு.க., இளைஞரணி செயலாளராகவும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Comments
Post a Comment