தர்மபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பி.என்.பி. இன்பசேகரன் வெளியிட்ட அறிக்கை



தர்மபுரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.

மாவட்ட கழக பொறுப்பாளர் பி.என்.பி. இன்பசேகரன் அறிவிப்பு.

தர்மபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பி.என்.பி. இன்பசேகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாளை 31 -ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பிஎன்பி இன்பசேகரன் தலைமை வகிக்கிறார். இதில் வரும் ஜூன் 3ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது மற்றும் கட்சி ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது எனவே இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments