இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் வரும் - அண்ணாமலை பேச்சு



திருவாரூர்: தமிழகத்தில் நடைபெறும் அறிவாலய குடும்ப ஆட்சி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் ஏற்படும் என, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தெற்கு வீதிக்கு கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக முன்னாள் திருவாரூர் மாவட்ட தலைவர் ராகவன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மற்றும் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டுவது, ஊர் பெயர்களை மாற்றுவது என இரண்டு வியாதிகள் பிடித்திருக்கின்றன. இந்த வியாதி காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. அதன் காரணமாக குடும்பத்தினரின் பெயரை அவர்கள் சூட்டினார்கள். தற்போது அந்த வியாதி திமுகவுக்கும் வந்துவிட்டது.

பிரதமர் மோடி, கோடிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போதிலும், ஒரு திட்டத்துக்கு கூட தனது பெயரை வைக்காமல் நாட்டு மக்களின் நலன் சொல்கின்ற பெயர் சூட்டினார். இத்தகைய நிலையில் திருவாரூரில் தியாகராஜர் தேரோடும் வீதிக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட நினைப்பது கண்டிக்கத்தக்கது.

Comments