பல ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரியில் ஆலங்கட்டி மழை!!!

தர்மபுரி 
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. டெல்லியில் வெப்பத்தாக்கம்  110.5 டிகிரியில் வெளுத்துவாங்கும் நிலையில் நேற்று ஊட்டியில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்து கடும் குளிரை உருவாக்கி வெப்பத்தை தணித்தது. 
 இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் சிந்தல்பாடி அருகே பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து தகர செட்டு கூரையை பிரித்தெடுத்து  திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் ஆச்சர்யத்துடன் நெகிழ்ச்சியாகியுள்ளனர்.
 கத்தரி வெயில் 4 ஆம் தேதி தொடங்கும் நிலையில் மக்கள் அச்சதிலும் உள்ளனர்.

Comments