தடங்கம்.பெ.சுப்ரமணி தலைமையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தர்மபுரி திமுக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் உயர்திரு M.R.K.பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைபடி கழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி அளித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் உயர்திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  
இந்நிகழ்சசியில் தலைமை கழக பேச்சாளர்கள் திரு.தூத்துக்குடி சரத்பாலா , திரு.ஆரூர் மணிவண்ணன் சிறப்புரை ஆற்றினார்கள்.
 தருமபுரி நகர கழக பொறுப்பாளர் திரு.மே.அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார். அது சமயம் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில , மாவட்ட , ஒன்றிய , நகர , பேரூர் , ஊராட்சி , கிளை கழக நிர்வாகிகள் , அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Comments