உலகப் புத்தகத் தின விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகேயுள்ள இராம கொண்ட அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பில் இலவசமாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.மு.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவையின் பொறுப்பாளர் நா.நாகராஜ் முன்னிலை வகித்தார். பள்ளியின் தமிழாசிரியர் சுப்ரமணியம் வரவேற்று பேசினார். உதவித் தலைமை ஆசிரியர் இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் மாராக்கவுண்டன் , ம. தாமரைச் செல்வன், ச.சுரேஷ்குமார் , ம.கர்ணன் , செ.கோவிந்தராசு மற்றும் மாணவ மாணவிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.
Comments
Post a Comment