ஏன் விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் பின்னால் நிற்கிறோம் - தொண்டர்கள் வெளியிட்ட பதிவு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள்..

இங்குள்ள அரசியல் தலைவர்கள் யாவரும் ஆட்சியை பிடிக்க மாநாடுகளோ, பொதுக்கூட்டங்களை நடத்திகொண்டு மக்களையெல்லாம் வாக்காளர்களாக மாற்றிக்கொண்டு இருக்கின்ற அரசியல் தலைவர்கள் மத்தியில்,

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 70 வது சட்டத்திருத்ததின் அடிப்படையில் அதிகாரம் அடிதட்டு மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று சட்டம் 1992 இல் இயற்றப்படது, அதனை நடைமுறைபடுத்த 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் என்று தமிழக அரசு அரசானை வெளியிட்டது, தமிழகத்தில் மொத்தம் 12000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள், அதில் 2800 தனித்தொகுதிகள் உருவாக்கப்பட்டது, அதற்கு முன்பு அனைத்து ஊர்களிலும் அவ்வூரில் உள்ள நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள் மட்டுமே அப்பதவிகளில் வகித்துவந்தனர்.

தலித் மக்கள் இதுநாள் வரை வாக்களித்து மட்டுமே வந்த, நாம் இனி அதிகாரத்திற்கு செல்லவும் முடியும் என்று பெரும் மகிழ்ச்சியில் திகைத்தனர், அதன் திருப்பமே தேர்தலை புறக்கணித்த இயக்கங்கள் யாவும், தேர்தலை சந்திக்க தடம் பதித்தனர்.

ஆதே போல் மதுரை மேலவளவு பகுதியும் தனித்தொகுதியாக்கப்பட்டது, அதற்கு முன்பு அங்கு தலைவர் பதவியை வகித்தவர் அழகர்சாமி அம்பலக்காரர் ஆவார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்பை கண்டு பொறுத்து கொள்ள முடியாத ஆதிக்க சாதிவெறியர்கள் ஊர் மந்தையில் அவ்வூர் பொதுமக்களை கூட்டி எச்சரித்தனர்,  தேர்தலில் யாரும் பங்கேற்க கூடாது, மீறினால் தலை துண்டாகும், உடம்பில் உயிர் இருக்காது என்று மிரட்டல் விடுத்தனர், இந்த சம்பவம் வெளிச்சதுக்கு வரவே வட்டாச்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர், அப்பேச்சுவார்தையில் ஆதிக்கசாதியினர் அமைதியாக சென்றனர். 

10.09.1996 அன்று தேர்தலில் போட்டியிட முருகேசன் (திமுக உறுப்பினர்) அவருடன் சிலரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர், அதனை பொறுத்து கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் அன்று மூன்று வீடுகளை கொளுத்தினார்கள். முதலில் தேர்தல் தள்ளி போகின்றது, பிறகு சாதிவெறியர் தேர்தல் நடக்கும் போது வாக்களிக்கும் மக்களை தாக்கி வாக்குசாவடிகளை சூறையாடி தேர்தலை தடுத்தார்கள். பின்னர் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது தலித் மக்கள் மட்டுமே வாக்களித்தனர், ஆதிக்க மனப்பான்மை கொண்ட மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இறுதியில் தேர்தலில் முருகேசன் வெற்றிபெருகிறார். ஊராட்சி மன்ற தலைவார பதவியேற்கிறார், அவர் தலைவராக பொறுப்பேற்க முடியாத அளவு நெருக்கடிகள் தந்தார்கள். தேர்தலில் பங்கேற்க வேட்பு மனு தாக்கல் செய்த போது எரிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினரை அழைத்து கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து இழப்பீடு பெற்றுகொடுக்க மனுஅளித்தனர், அவர் திரும் வழியில் பேருந்தை வழிமறுத்து அவருடன் வந்த ஆறு பேரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் முருகேசனை தலை, கால், கை, உள்ளிட்ட உறுப்புகளை கொடுரமாக வெட்டி, தூக்கி கொண்டு ஓடினார்கள், 

1997 ஆம் ஆண்டு இந்த வழக்கானது பெரும் கொடுரமான வழக்காகும், அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வந்தனர். 

இப்படி பட்ட கொடூரங்கள் அரங்கேற்றப்ட்ட நாள் தான் சூன் 30, அந்த நாளில் ஆண்டு தோறும் மதுரை மேலூர் மேலவளவு சென்று அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துகிறார் விசிக தலைவர் முனைவர் திருமாவளவன் அவர்கள்.
(மதுரை மேலவளவில் விடுதலை களம் என்று பெயரிட்டு முருகேசன் சிலை நிறுவப்பட்டது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்).

கொடுரங்கள் நிறைந்த சூன் 30 இல், பொதுவுடமை பேசுபவர்களும், முற்போக்கு பேசுபவர்களும், திராவிடம் பேசுபவர்களும், தமிழர் என்று பேசுபவர்களும், இனவாதம், மொழிவாதம் பேசுபவர்களும், அந்த அமைப்பு, இந்த அமைப்பு, என யாவரும் தனது பிழைப்புவாதத்திற்கும், ஓட்டு பொறுக்கவும் அமைதியாக இருக்கும் போதும், கோமா நிலையில் பயணிக்கும் போதும் அதனை எல்லாம் எதிர்த்து, உடைத்து ஆண்டு தோறும் அங்கு செல்கிறார் விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், 

மேலவளவு கொடூரங்களை பற்றி பேசாத அறிவு ஜீவிகளும், அரை வேக்காடு கூட்டமும், எதார்த்த அரசியலை உள்வாங்காமல், இன்று அவர் குடமுழக்கில் பங்கேற்ற (விரும்பம் இல்லாமல்) புகைப்படத்தை வைத்துக்கொண்டு பக்கம், பக்கமாக எழுதி விமர்சிக்சிக்கின்றனர், இந்த பாமர மக்கள் அவரின் மீது வைத்துள்ள அதீத நம்பிக்கையால், அவர்களின் கோரிக்கையை மறுக்க முடியாமல் செல்கிறார், இது போன்று நிகழ்ச்சிகளுக்கு.

பார்பனர்களின் கணக்குபடி அவர்கள் குறிக்கின்ற நேரம் நல்ல நேரம்,
மருவத்தூர் கிராம மக்களின் நல்ல நேரம் தலைவர் திருமா எந்த நேரத்தில் வருகின்றாரோ, அந்த நேரம் தான் நல்ல நேரம்.

பிழைப்புக்காகவும், ஓட்டுக்காவும், அரசியல் செய்கின்ற தலைவர்களுக்கு மத்தியில் அடுத்த தலைமுறையை அரசியல்படுத்த நினைக்கும் தலைவர் யார் என்றால் விசிக *தலைவர்* *முனைவர்* *தொல்.திருமாவளவன்* அவர்கள் மட்டுமே, அதனாலே அவரின் பின்னால் பயணிக்கின்றோம்...
என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Comments