சேலம் மத்திய பேருந்து நிலையத்திற்கு தினமும் 7000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பெட்ரோல் டீசல் விலை ஏறுவதை போல சேலம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் "1 லிட்டர் தண்ணீர்" பாட்டில் 28 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று பயணிகள் புலம்பி வருகின்றனர். சேலம் மாநகராட்சி நிர்வாகம் குடிநீரில் கொள்ளை அடிக்கும் இது போன்ற கொள்ளை கும்பலின் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment