தனியார் பள்ளி மாணவி ஒருவர் விடுதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியால் கால்முறிந்தது.மேல்சிகிச்சைக்காக கோவைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.போலிசார் தீவிர விசாரணை
தர்மபுரி
அதியான்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி(லோகேஸ்வரி 17)விடுதியில் தற்கொலை முயற்சி கால் முறிந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்ப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதியமான்கோட்டை கலக்ட்டர் பங்களா அருகே உள்ள தனியார் பள்ளியில் ( செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) விடுதியில் தங்கி பனிரெண்டாம் வகுப்பு ( maths biology ) படித்து வரும் (லோகேஸ்வரி,17) என்ற மாணவிஇரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்..
கால் முறிந்து, உடலில் காயங்களுடன், தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.தனியார் பள்ளியில் மாணவர்களின்பெற்றோர்களுடன் பள்ளி நிர்வாகம் நடத்தும் மாதாந்திர கூட்டம் நடைபெற்று முடிந்து நிலையில் இன்று கணித தேர்வு நடைபெறுகிறது.இந்நிலையில் இந்த மாணவி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்தப்பினார்.மாணவியிடம் போலிசார் தீவிரமாக ரகசிய விசாரணை மேற்கொண்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மேலும் தனியார் பள்ளி நிர்வாகத்திடமும் பொறுப்பு பணியில் இருந்த ஊழியர்களிடமும் அதியமான் கோட்டை போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment