வளர்ந்த சமூதயத்தின் முன் வளராத சமூதாயம் தன்னை வளர்த்துக்கொள்ள கடன் பெற்று செலவு செய்திருக்கலாம் அந்த நம்பிக்கை வீண் போகும்போது ஆத்திரமும் ஆவேசமும் வருவது இயற்கை, அப்போதுதான் எதிரே வருபவர் யார் என்று தெரியாமலும் பொதுச்சொத்தை அழிப்பதும், போக்குவரத்திற்கு இடையுராக இருப்பதும், தமிழ்நாட்டின் அரசியல் அமைப்பிற்கு வாடிக்கையாக உள்ளது. இப்படி நம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சமூதாய மக்களை பெரியார் வழியிலும் அற வழியிலும், தன் வாழ்க்கையே அற்பணித்துக்கொண்ட ஒரு தலைவருக்கு தொண்டர்கள் தன்னுடைய காணிக்கையாக நற்பெயர்களையே வாங்கி தரவேண்டும், ஆனால் எந்த அமைப்பாக இருந்தாலும் பொதுச் சொத்தை சேதபடுத்துவது தன் வீட்டை தானே அழிப்பதற்கு சமம் ஆகும். இதற்கு பொ. மல்லாபுரம் சம்பவம் மட்டும் எடுத்துக்காட்டு அல்ல' இதற்கு முன் நடந்த எத்தனையோ சம்பவங்களை அடையாளப்படுத்தளாம். நம் வருங்கால சமுதாயத்திற்கு அம்பேத்கர், காந்தி, நேரு, பெரியார், அண்ணா, காமராஜர், அவர்கள் காட்டும் வழியில் சமுதாயத்திற்கு வழி காட்டுதலே நம் தலைவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.
Comments
Post a Comment