தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி -
திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து தற்பொழுது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தற்பொழுது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடிக்கான சான்றிதழோடு நகை கடன் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் எழுமலை பேரூராட்சியில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எழுமலை கிளையில் வாடிக்கையாளர்கள்ஐந்து பவுனுக்கு கீழ் அடமானம் வைத்து உள்ள நகைகள் தள்ளுபடி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
வங்கியின் மேலாளர் சிவக்குமார் தலைமையில் உதவி மேலாளர் சிவக்குமார் உதவியாளர்கள் சுவலட்சுமிவிக்னேஷ் ஆகியோர் பயனாளிகளின் உரிய ஆவணங்களை சரி செய்து நகைகளையும் சரிபார்த்து சான்றிதழ் வழங்கி நகைகள் திரும்ப வழங்கி வருகின்றனர்
பயனாளிகள் மகிழ்ச்சியுடன் நகைகளை திரும்பப் பெற்று செல்கின்றனர்.
இதில் எழுமலை பேரூராட்சி தலைவர் ஆர் பி ஜெயராமன், துணை தலைவர் சிறைசெல்வம் நாகஜோதி, 10வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமிபாபு, திமுக மாணவ இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் உட்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment