சென்னையை சேர்ந்த இஷாக் என்பவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஆம்பூர் வழியாக தனது புத்தம் புதிய X u v 7டபுள் ஓ காரில் சென்றுள்ளார்.கார் ஆம்பூர் அடுத்த ஐயனூர் அருகே அதிவேகமாக வந்த போது எதிர்பாராதவிதமாக சென்டர் மீடியனில் இருந்து குதித்த நபர் வேகமாக சாலையை கடந்தார். அந்த நபர் மீது மோதாமல் இருக்க காரை பிரேக் போட்டு திருப்பியுள்ளார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தரிக்கட்டு ஓடிய கார் எதிரேசென்டர் மீடியனை தாண்டி எதிரே வந்த மாருதி சுசிகி ரிட்ஸ் கார் மீது மோதியதில் மாருதி சுசிகி காரில் வந்த நருவி மருத்துவர் சிவகுமார் உடல் நசுங்கி பலியானார். இசாக் ஓட்டிவந்த காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் காயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி ஆம்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது விபத்தை ஏற்படுத்தியவர்களை மூவரை சொகுசு காரில் வந்த நபர் தனது வாகனத்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாலையில் முறையாக கார் ஓட்டிவந்த மருத்துவர் விபத்தில் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நெடுஞ்சாலையில் வரும் வாகனத்தின் வேகத்தை அறியாமல் சாலையை கடப்பவர்கள் மீது தவறு என்றால் 200 கிலோமீட்டர் சென்றாலும் பிரேக் அடித்தாலும் கார் அதே இடத்தில் நிற்கும் என விளம்பரப்படுத்தப்பட்ட மஹேந்திரா நிறுவனத்தின் X u v 7டபுள் ஓ கார் பிரேக் அடித்தும் நிற்காமல் தரிக்கட்டு ஓடி மத்திய சாலை தடுப்பை தாண்டி எதிர் சாலையில் புகுந்த கார் சிறிய கார் மீது மோதி மருத்துவரின் உயிரை பலிவாங்கியதும் முக்கிய காரணமாகிவிட்டது. என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
Comments
Post a Comment