டூரிஸ்ட் பேருந்தை வைத்து டிக்கெட் போடும் பேருந்துகள் - பாட்டு சத்தமும் தாங்கமுடியல பயணிகள் கதறல் கண்டுகொள்ளுமா தர்மபுரி போக்குவரத்து துறை !
தர்மபுரி
பாட்டுச்சத்தம் தாங்க முடியல பயணிகள் கதறல்
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்துர், ஹரூர் நரிப்பள்ளி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு 20 க்கும் தனியார் பேருந்துகள் சென்றுவருகின்றது. இதில் ஒரு சில பேருந்துகளில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுகிறது. குறிப்பாக தர்மபுரி டூ பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு செல்லும் தனியார் பாலமுருகன், கார்த்திகேயன், பேருந்துகள் அதிகமான சத்தத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தும் ஒலிபெருக்கியை பயன்படுத்தி வருகினறனர். ஒலியின் அளவை ஓட்டுனரிடம் சொல்லி குறைக்க சொன்னால் பாட்டு கேட்காம எங்களால ஓட்ட முடியாது. பாட்டு சத்தம் இல்லனா நாங்க தூங்கிடுவோம்னு அந்த பேருந்து ஓட்டுநர் உதியகுமார் மற்றும் நடத்துநர் அஜாக்கிரதையாக பதில் தருகின்றனர். இந்த சத்த்தால் பயணிகள் சொல்லும் குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட பேருந்து ஓட்டுனருக்கு காதுகள் கேட்பதில்லை, இதனால் கூட பின்னால் வரும் வாகனத்தின் பேருந்து சத்தத்தை கேட்டு உணராமல் இருக்குமாயின் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பாதிக்கபட்ட தனியார் பேருந்துகளின் பயணிகள் வேதனையுடன் கூறுகின்றனர். பதிவு செய்யப்பட்ட மற்றும் பயணசீட்டில் உள்ள எண்ணின் பேருந்தை இயக்காமல் அதிகமான பயணிகளை யேற்றி தங்களின் வருமானத்தை கூறுவதற்காக டூரிஸ்ட் பேருந்தை
இயக்கி வருகின்றனர். இதை கண்டு அரசுப்பேருந்து ஓட்டுனர்களும் கடுப்பாகி உள்ளனர். திடீரென பயணித்தின் போது மக்களுக்கு ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டால் எந்த பேரூந்தின் எண்ணை வைத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. தமிழக அரசு கூடுதலாக தர்மபுரி சுற்று வட்டார பகுதிக்கு பேருந்துகள் இயக்கினால் மக்கள் தனியார் பேருந்தை நாட அவசியமில்லை என தர்மபுரி மக்கள் புலம்புகின்றனர்.
விதிமீறல்களை மீறி பேரூந்தை இயக்குபவர்கள் மீது தர்மபுரி மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் கண்காணித்து மக்களின் செவிகளையும் மனதையும் காக்கும்படி தர்மபுரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment