தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் தகுதி உள்ள பயனாளிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. வருகின்ற 31 ஆம் தேதிக்குள் 14 நான்கு லட்சத்து 40000 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் இதன் மூலம் 6000 ஆயிரம் கோடி செலவில் மதிப்பில் உள்ள நகைக்கடன் தள்ளுபடி ஆகும் மற்றும் முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் மீதும் கிருமணல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அமைச்சர் அறிக்கை வெளியீட்டிருந்தார். ஆனால் இந்த கணக்கெடுப்பில் பல்வேறு இடங்களில் தகுதி உள்ள நபர்களை இணைக்காமல் தங்களுக்கு சாதகமான நபர்களுக்கு முறைகேடாக நகைக்கடன் பதிவேட்டில் பெயர்களை இணைத்துவிட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ரேகடஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்துவிட்டதாக திடிரென்று மக்கள் கோஷங்களை எழுப்பினர்.
பிறகு அருகாமையில் இருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக இருக்கம்படி கூறியதில் சற்றுநேரம் மக்கள் அமைதி காத்தனர். நமது எவிடென்ஸ் பார்வை செய்தியாளர்கள் இந்த தகவலை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவித்தவுடன்
சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்தபோது அதிகாரிகளால் கடன் வைத்த மக்களின் ஸ்மார்ட் கார்டு அட்டை எண் வேறொருவருக்கு மாறி
குளறுபடியானது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் அதிர்ந்து போன அதிகாரி மீண்டும் பாதிக்கபட்ட மக்களை மேல்முறையீடுக்கான மனு ஒன்றை விண்ணப்பித்து தாருங்கள் ஆய்வு செய்து தங்களுக்கான தேவையை பூர்ததி செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்.
Comments
Post a Comment