நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 பேர் வெற்றிபெற்றுள்ளனர். அந்த 7 பேரும் திமுகவுடன் ஒன்றிணைந்து செய்லபடுகிறார்கள்,ஒவ்வொரு பேரூராட்சியில் நகராட்சியிலும், வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சி வார்டு உறுப்பினர்களை திமுகவின் மாவட்ட செய்யலாளர் மற்றும் அந்த பகுதிக்கான பொறுப்பாளர்களின் பாதுகாப்பில் வெற்றி பெற்ற நாள் முதல் மறைமுக தேர்தல் நடைபெற்ற நாள் வரை ஒன்றிணைந்து இருந்தனர். அவர்களுக்கான இருப்பிட வசதி மற்றும் உணவு தங்கும் வசதி இவை அனைத்தும் திமுகாவின் நிர்வாகிகளால் செய்யப்பட்டு பாதுகாத்து வந்தனர். மறைமுக தேர்தல் நடைபெற்ற நாளுக்கு முன்பு திமுக தலைமை அறிவித்த தலைவர் வேட்பாளர்களுக்கு அனைத்து அந்த மன்றத்தில் உள்ள திமுக மற்றும் தோழமைக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தந்து வாக்களித்தனர்.இதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகள், 1 நகராட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியான விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட பொ மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி மட்டும் தலைமையின் அறிவிப்பை மீறி திமுகாவை சேர்ந்த 13 ஆவது வார்டு உறுப்பினர் சாந்தி புஷ்பராஜ் என்பவர் விசிக வை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். விசிக பலமாக உள்ள பொ மல்லாபுரம் பகுதியில் விசிக வின் தோல்விக்கு காரணம்என்னவென்று களஆய்வு செய்யும்போது அந்த பேரூராட்சியை சேர்ந்த தருமபுரி மாவட்டத்தின் விசிக வின் முன்னணி தலைவர்களில் ஒருவர் தான் நற்பெயர் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை யாரையும் அரவணைக்கால் சென்று திமுகாவின் முன்னணி நிர்வாகிகள் இடத்தில் மேற்கொண்ட அணுகமுறை முக்கிய காரணமாக தெரிகிறது.
விடுதலைச்சிறுத்தைகளுக்கு பேரூராட்சி தலைவர் வேட்பாளர் அறிவித்தபின்பு, இங்கே திமுகாவிற்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்கும் நடந்த கருத்து பரிமாற்றங்களை முறையாக தலைமைக்கு தெரியப்படுத்தி அவர்களின் வழிகாட்டுதலை பெறாமல் தன்னீச்சியாக செயல்பட்டதும் காரணமாக இருந்துள்ளதென்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அடிமட்ட தொண்டர்கள் புலம்புகின்றனர். திமுகாவை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் வார்டு உறுப்பினர்களை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்க்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாதென்று அறிவுறை வழங்காதது மேலும் ஒரு காரணமாக உள்ளது என அரசியல் விமர்சர்கள் தெரிவிக்கின்றனர். முறையாக அறிவிக்கப்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர் மற்றும் அவரை வழிநடத்தியவர்கள் தங்களுக்கு போட்டி வேட்பாளர்கள் உருவாகுவதை தடுப்பதற்கு எந்தவித முயற்ச்சியும் மேற்கொள்ளவில்லை, என்பது அக்கட்சியினரிடையே விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வாறு மாறி மாறி கூட்டணி கட்சியின் தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சர்கள் பார்வையில் இவ்வாறு இருக்கும்போது திமுகாவின் மாவட்ட செயலாளரான தடங்கம் சுப்பிரமணி மற்றும் முன்னாள் அமைச்சர் மீது மட்டும் திமுக தலைமை நடக்வடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை வைத்து சமூக ஊடகங்களில் போஸ்டர், மற்றும் செய்தி வெளியிடுவது அரசியல் அறத்திற்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. முதல்வர் அவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களிடையே குறுகி நிற்கிறேன் என்று கூறிய பிறகும் தனது தலைவர் பதவியை ராஜனாமா செய்ய மறுக்கிறாரா ? பொ மல்லாபுரம் திமுக பேரூராட்சி தலைவர்.!
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்'' ''இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் அறிவித்தபிறகும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் பெயரில் திமுகவின் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போஸ்டர் வெளியிடுவதின் பின்னணியில் சமூக நீதி கோட்பாட்டிற்கு எதிரான சனாதன சக்திகளுக்கு துணை போகிறார்களா ? என ஆணித்தரமான சந்தேகம் எழுந்துள்ளது.
குள்ளநரி என்று மிகவும் கோவளமாக கூட்டணி கட்சியான விசிகவை விமர்சிப்பதை திமுக மாவட்ட நிர்வாகம் கண்டிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது மோலும் இந்த செயல் திமுகவின் தலைமை கலைஞர் மீது உறுதி ஏற்ற நிலையில் மாவட்ட செயலாளர் பதிவி ஆசையிலும் சாதி ஆணவத்துடன் செயல்படுவது தலமைமிறு செயல்படுவது மிகவம் கண்டிக்கதக்கது.
ReplyDelete