அலங்காநல்லூர், மார்ச்.17-
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்டமான் கிராமத்தில் ஶ்ரீ செல்வ விநாயகர், பூர்ண புஷ்கலா சமேத அய்யனார், கம்பளி கருப்புசாமி, முத்தாலம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த ஆறு கால யாக சாலை பூஜையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜையுடன் பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வானத்தில் கருடன் வட்டமிட புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அங்கு உள்ள அய்யனார், கருப்புசாமி, முத்தாலம்மன் கோவில் கோபுர கலசங்கள், மற்றும் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அங்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், அறுசுவை உணவு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அண்டமான் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கு சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கோயில் விழாக்குழுவினர், கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஜெகநாதன், மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதி மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment