கொண்டலாம்பட்டியில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் வீட்டின் பெண் தர்ணா போராட்டம்

 


சேலம் கொண்டலாம்பட்டி சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் இவரது மனைவி பேபி இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் வெங்கடாசலம் மற்றும் அவரது குடும்பத்தினர் பேபியிடம் ரூ 15 லட்சம் கேட்டுள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதை பற்றி பேபி தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறி கொண்டலாம்பட்டி பெண்கள் காவல் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ரூ 15 லட்சம் வரதட்சணை கொடுத்தால் குடும்பம் நடத்த இயலும் இல்லையேல் வேறு திருமணம் புரிவதாக வெங்கடாசலம் கூறியதை அறிந்து மனமுடைந்த பேபி வெங்கடாசலம் வீட்டின் முன் நீதி வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறி பேபியை சமாதானம் செய்துள்ளனர்.இதனால் பேபி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளார்.திருமணமாகி ஒருவருடம் நிறைவடையாத நிலையில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments