தர்மபுரி:-
தர்மபுரி மாவட்டம் சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் குடியிருக்கும் நம்பிராஜன் மனுதாரர் இவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அவர்களுக்கு 10 கோரிக்கைகளை வைத்து பதிவுத் தபால் மூலம் பதிவுத் தபால் எண் : RT680912138IN 23/12/2021 தேதி அன்று மனு செய்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்ப கடிதம்
தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்ப கடிதம்
தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்ப கடிதம்
அந்த கடிதத்தை 24/12/2021 தேதியன்று பொது தகவல் அலுவலர், சார்பதிவாளர் அலுவலகம், பாப்பிரெட்டிப்பட்டி . தர்மபுரி மாவட்டம். அஞ்சல் எண் : 636905. பெற்றுக்கொண்டு உள்ளார் என்பதற்கான ஆதாரம்👇
ஆனால் பொய்யாக சட்டத்திற்குப் புறம்பாக அரசு அலுவலர் 19/01/2022 தேதியில் தான் பொது தகவல் அலுவலர் பெற்றுக் கொண்டேன் என அவருடைய பதில் கடிதம் எண். 279/2021 நாள்.19.01.2022 தெரிவித்துள்ளார்.
பொது தகவல் அலுவலர் பதில் கடிதம்
பொது தகவல் அலுவலர் பதில் கடிதம்
தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்ப கடிதத்தை 24/12/2021 தேதியன்று பெற்றுக்கொண்டார் என்பதற்கு ஆதாரம் அஞ்சல் துறை RTI கடிதம் எண்: No.B3/RTI/Dec/19/2021 dated at Dharmapuri 636701, the 19.01.2022 இக்கடிதம் கூறுகிறது. மேலும் பொது தகவல் அலுவலர் அவர்களே கையொப்பமிட்டு மனுவை வாங்கிய இந்திய அஞ்சல் துறை டெலிவரி ஸ்லீப்பும் கூறுகிறது.
மேலும் பொதுத் தகவல் அலுவலர் பதில் கடிதத்தில் 21/01/2022 தேதி கையொப்பம் இடப்பட்டு பதில் கடிதத்தை அஞ்சல் துறை பதிவு தபால் (பதிவுத் தபால் எண்: RT851470393IN ) மூலம் 25/01/2022 தேதியன்று தான் புக் செய்யப்பட்டு அனுப்பி உள்ளார். இக்கடிதம் மனுதாரருக்கு 27/01/2022 தேதியன்று தான் கிடைக்கப்பட்டது, ஆனால் மனுதாரருக்கு 24/01/2022 தேதிக்கு முன்பு அனுப்பப்பட வேண்டும், தகவல் அறியும் உரிமை சட்டம் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் பொதுத் தகவல் அலுவலர் பதில் அனுப்பப்படவில்லை. பொது தகவல் அலுவலர் சட்டத்தை மதிக்கவில்லை. 21/01/2022 தேதியன்று பதில் அளித்து விட்டதாக பொய்யாக சட்டத்திற்கு புறம்பாக பொது தகவல் அலுவலர் செயல்பட்டுள்ளார். பொது தகவல் அலுவலர் 25/01/2022 தேதி அன்று தான் தன்னுடைய பதில் கடிதத்தை மனுதாரருக்கு அனுப்பினார் என்பதற்கான ஆதாரம் . 👇
மேலும் தகவல் வழங்காத சார்பதிவாளர் செல்வி.இந்திரா அவர்கள் மீது தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் கீழ்கண்ட சட்டப்பிரிவுகள் படி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு தகவல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுதல் மனுதாரர் கூறி வருகின்றார்.
A.தகவல் அறியும் உரிமைச்சட்டம் சட்ட பிரிவு 7(6) படி நான் கோரிய முழு ஆவணங்கள் இலவசமாகவும் அளிக்க வேண்டுகின்றார் .
B. தகவல் அறியும் உரிமைச்சட்டம் சட்ட பிரிவு 19(8)b படி நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டுகின்றார் .
C. தகவல் அறியும் உரிமைச்சட்டம் சட்ட பிரிவு 20(1) படியும் -பொதுத் தகவல் அலுவலர் முழு தகவல் அளிக்கும் வரை தண்டனைத் தொகை பெற்றுத்தர வேண்டுகின்றார்.
D. தகவல் அறியும் உரிமைச்சட்டம் சட்ட பிரிவு 20(2) படி பொது அதிகார அமைப்பின் மீது (Disciplinary Action) துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றார்
.
Comments
Post a Comment