ஆதிதிராவிட நல அலுவலர் சரவணகுமார் என்பவரின் காரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியில் ஆதிதிராவிட நல அலுவலராக பணியாற்றி வருபவர் சரவணகுமார்.
இவர் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்றபோது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறவழிசாலையில் அவரது வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரூ.40 லட்சத்திற்கும் மேலாக பணம் இருந்ததை கண்டறிந்தனர். இதனடடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ஆதிதிராவிட நல அலுவலக அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சரவணகுமார் மற்றும் அவருடன் பயணித்த மணி என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரில் ரூ.40 லட்சம் பணம் கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் எல்லை பகுதியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து காரை பின்தொடர்ந்து விழுப்புரம் புறவழிச்சாலை அருகே சோதனை செய்தபோது காரில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எதற்காக இந்தப்பணம் கொடு செல்லப்படுகிறது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது
Comments
Post a Comment