நள்ளிரவில் காரில் செல்கையில், இந்த இளைஞர் வேகமாக ஓடி செல்வதை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
இளைஞரின் வேகத்துக்கு இணையாக காரை ஓட்டியபடியே, அவருடன் பேச்சு கொடுத்தார்.
'நள்ளிரவில் இத்தனை வேகமாக ஓடி எங்கே செல்கிறீர்கள்; காரில் ஏறுங்கள் நான் இறக்கி விடுகிறேன்' என வினோத் கூறினார்.இதை மறுத்த பிரதீப், 'ராணுவத்தில் சேர வேண்டும் என்பது என் லட்சியம். அதற்கு பயிற்சி எடுப்பதற்காகவே, தினமும் இப்படி ஓடுகிறேன். நள்ளிரவில் மட்டுமே, அதற்கு நேரம் கிடைக்கிறது' என பதில் அளித்தார். பிரதீப் உடனான இந்த உரையாடலை, தன் 'மொபைல் போனில்' படம் பிடித்த வினோத் கப்ரி, அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதை, 12 மணி நேரத்தில், 38 லட்சம் பேர் பார்த்து உள்ளனர். 1.53 லட்சம் பேர், 'லைக்' குறியிட்டுள்ளனர்.இந்த வீடியோ, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'டிரெண்டிங்' ஆகிஉள்ளது.
Comments
Post a Comment