தனியார் பள்ளி ஆசிரியர் குறுஞ்செய்தி மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர் விருத்தாசலம் எருமனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி மகன் சாமிநாதன் (வயது 34).
இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு குறுஞ்செய்தி மூலம் செல்போனில் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதனை ஏற்காத மாணவி தனியார் பள்ளி மாடியில் இருந்து நேற்று காலை குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்த சக ஆசிரியர்கள் பள்ளி மாணவியை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் தனியார் பள்ளி ஆசிரியர் சாமிநாதன் என்பவரை கைது செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment