போதை பொருள் கும்பலுக்கு வலை வீசும் சைலண்ட் இன்ஸ் லதா

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  கள்ளத்தனத்தில் மதுபானங்கள், விற்கப்பட்டு வந்த நிலையில் இதை தாண்டி கூடுதலாக தூக்கமாத்திரையின்  மூலம் தயாரிக்கப்படும் போதை பொருள், மற்றும் கஞ்சா, குட்கா, இதுபோன்ற அபாயகரமான போதைப்பொருட்கள் தர்மபுரி மாவட்ட  இளைஞர்களின்  வாழக்கையில் நுழைந்து சீரழித்து வருகிறது.  இந்த மண்ணில் பெரும்பாலானோர் அதிகமாக விவசாயிகள் மற்றும் ஏழைகளின் பிள்ளைகள்தான் உள்ளனர். ஒன்றும் வசதியான மக்கள் இங்கு வாழ்வதில்லை,  பெரும்பாலான மக்கள் தர்மபுரியில் இருந்து


வெளியூர் பகுதிகளுக்கு சென்று கட்டடம் கட்டுதல், கரும்பு வெட்டுதல் 
, திருப்பூர் பனியன் தொழில்,
 குழாய் பதிக்கும் பணிகள்  மற்றும் தினந்தோறும் கிடைக்கும் 300 ரரூபாய்- வேலைகளுக்கு சென்றுதான் தனது பிள்ளைகளை எப்படியாவது நல்ல நிலைமைக்கு கொண்டுவரவேண்டும் என்று பெற்றவர்கள் தங்களது உடல் உழைப்புகளை அற்பணிக்கிறார்கள். இப்படிப்பட்ட மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த இளைஞர்களை  குறிவைத்து அவர்களிடம் பணத்தாசையை உண்டாக்கி கஞ்சா குட்கா போன்ற போதைப்பொருளுக்கு அடிமையாக்கி பின்பு அவர்களின் மூலம் பல்வேறு இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்து வருகின்றது கண்ணுக்கு தெரியாத மாஃபியா கும்பல், இந்த மாஃபியா கும்பல் தர்மபுரி, அரூர் . பாப்பிரெட்டிப்பட்டி , பாலக்கோடு பகுதியில் உருவெடுத்துள்ளது. 

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூட அரூர் அருகே  டி.எஸ். பி பெனார்ஸிப் பாத்திமா அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கேரளாவில் இருந்து வந்த மூன்று இளைஞர்கள் சாக்குமூட்டையில் வைத்திருந்த கஞ்சாவோடு  பிடிபட்டனர். சமீபத்தில் கூட தர்மபுரி  நூலஹள்ளி அருகே கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்ததும்  அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, காவல்துறையினர்  மற்றும், சி.ஐ. டி , ரகசியமாக   விசாரணை நடத்திய  பிறகு நூலஹள்ளி அடுத்த வட்டாளிகொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மாறி (75) என்ற முதியவர் கைதுசெய்யப்பட்டார். 

அதே தினத்தில் குரும்பட்டி கிராமத்தில் முதியவர் விஜயராகவன் (63) தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் காவல்துறையினர் இவரை கைது செய்து அவர்  வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Comments