பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுலகத்தில் அரசு ஊழியர்கள் உரிய நேரத்தில் வருவதில்லை - பாப்பிரெட்டிப்பட்டி மக்கள் வேதனை
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் உரிய நேரத்திற்கு வந்து தங்களது பணிகளை தொடங்குவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு அரசு பணியாளர்கள் குறைந்தபட்சம் 9-45 முதல் அதிகபட்சமாக 10-10 மணிக்கு தங்களது பணிகளை தொடங்கவேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது, ஆனால் இங்கு அதற்கு எதிர்மறையாக நடைபெற்று வருகின்றன. நிலப்பிரச்சனை, சாலை பிரச்சனை, பட்டா வழங்கவில்லை நிலத்தை வந்து அதிகாரிகள் அளந்து தரவில்லை என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வைத்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். நேரத்திற்கு வந்து தங்களது பணிகளை செய்யாமல் இருந்தால் பாதிக்கப்படுவது என்னவோ ஆளும் அரசும், மக்களும்தான்.
அலுவலகத்தில் அமருவதற்கு இருக்கைகள் கிடையாது, தரையில்தான் அமரவேண்டிய சூழல் உள்ளது, ஆதார் மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தங்களது பணிகளை 10-30 அல்லது 11 மணிக்கு தொடங்குகின்றனர், அதுமட்டுமல்லாமல் ஆதார் சேவை மையத்தில் உள்ள பணியாளர் காலைப்பொழுதில் 9-30 மணிக்கே வந்து பொது இ சேவை மையத்தில் பணியாற்றுகின்றார். இவர் மட்டுமல்ல பொதுவாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 70 % பணியாளர்கள் உரிய நேரத்தில் தங்களது பணிகளை தொடங்காமல் காலத்தை கடத்துவதால் நாங்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறோம், இதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து பணிக்கு உரிய நேரத்திற்கு வரமால் இருக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மனவேதனையுடன் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment